முதல் அமர்விலேயே மூக்குடைபட்ட பிரதமர் ரணில்!
நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகர் தேர்தல் குறித்து இன்று சபை அமர்வில் விவாதிக்கப்பட்டது.
இதன் போது பெண் எம்.பி ஒருவரை நியமிக்குமாறு பிரதமர் தமக்கு தெரிவித்திருந்தமையினால் ரோகினி கவிரத்னவை நியமித்ததாக எதிர்க்கட்சிகள் கூறினர்.
இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் அமைதியாக இருந்ததை அவதானிக்க முடிந்ததாக நாடாளுமன்ற தகவல்கள் கூறுகின்றன.
அதேசமயம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில், அஜித் ராஜபக்சவின் பெயரை பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பிரேரித்தார்.
அதேசமயம் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான வாக்கெடுப்பு மீதான வாதப்பிரதிவாதங்கள் முழுவதிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மௌனமாகவே இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
தொடர்புடைய செய்தி
31 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஸ தெரிவு!