பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு விஜயம் செய்த ரணில்!
கொழும்பில் இருக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, (Ranil Wickremesinghe) இரண்டாம் எலிசபெத் மகாராணியின் (Queen Elizabeth II) மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (11-09-2022) முற்பகல் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் (Sarah Hulton) வரவேற்றார்.
பின்னர் அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நினைவுப் புத்தகத்தில் அனுதாபக் குறிப்பை எழுதிய ஜனாதிபதி, 07 தசாப்தங்களாக இரண்டாம் எலிசபெத் மகாராணி, உலக மக்களுக்கு ஆற்றிய அளப்பரிய சேவையை நினைவுபடுத்தினார்.
எதிர்வரும் 1-ம் திகதி லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்குகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ள உள்ளார்.