பாதுகாப்பு அமைச்சிற்கு திடீர் விஜயம் செய்த ஜனாதிபதி ரணில்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) இன்று 21 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
பின்னர், ஸ்ரீ ஜயவர்தனபுற கோட்டையில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சிற்கு விஜயம் செய்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவினால் (Kamal Gunaratne) வரவேற்கப்பட்டார்.
இதன்போது ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சிலுள்ள அதிகாரிகளுடன் சமுகமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விஜயத்தின் போது அமைச்சர் டிரான் அலஸ், சட்டமா அதிபர், ஜனாதிபதி செயலாளர், பாதுகாப்பு பதவிநிலை தலைமை அதிகாரி ஜெனரல் ஜெனரல் சவேந்திர சில்வா, முப்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர், அரச புலனாய்வு பிரதானி, தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.