உதய கம்மன்பிலவுக்கு தூதுவிட்ட ரணில்...எதற்காக தெரியுமா?
அரசாங்கம் பதவி விலகக் கோரி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் மஹிந்த ராஜபக்ஷ திங்கட்கிழமை பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்.
இந்நிலையில், புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி நியமித்தார்.
இந்நிலையில், பிரதமர் தலைமையில் புதிய அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் தற்போது ஆலோசிக்கப்பட்டு வரும் நிலையில், முதற்கட்டமாக நேற்று 04 அமைச்சர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கடந்த அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக இருக்க தீர்மானித்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.