ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு இதுதான் காரணம்! வெளியான தகவல்
நாடாளுமன்றத்தில் தனி நபராக இருப்பதால், ரணில் விக்கிரமசிங்க (Ranil Wcikremesinghe) சுதந்திரமாக செயற்படுவார் என்ற நம்பிக்கையிலேயே அவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன (S. M. Chandrasena) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (17-05-2022) நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டுத் தொடர்புகள் உள்ளதாலும், வெளிநாடுகளில் இருந்து டொலர்களை திரட்டிவிடலாம் என எண்ணியதாலும் கட்சி பேதமின்றி பிரதமரை நியமித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவர் தனியாக இருப்பதால், அவர் சுதந்திரமாக செயல்படுவார்.
வெளிநாட்டில் இருந்து சில டொலர்கள் சம்பாதிப்பதால், கட்சி, பெரிய ஆதாயம் என்ற பேதமின்றி, தனி நபர் நலனுக்காக, சுதந்திரமாக பணியாற்றும் வாய்ப்பை அவருக்கு வழங்கியுள்ளோம். வேறு எந்த காரணத்திற்காகவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.