ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை பாராட்டிய முன்னாள் ஜனாதிபதி!
தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு தொடர்ந்தும் இணங்கி வருவதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கக்கு Anura kumara Dissanayaka பாராட்டு தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (30-11-2024) பிற்பகல் அமாரி கொழும்பு ஹோட்டலை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ரணில் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
அமாரி கொழும்பு ஹோட்டல் குழுமமானது கொழும்பில் உள்ள இலங்கை தொழிலதிபர் ஒருவருக்க சொந்தமான முதல் ஐந்து நட்சத்திர சர்வதேச ஹோட்டலாகும்.
ஹோட்டல் திறப்பு விழாவில் முன்னாள் ஜனாதிபதி ரணில், அமைச்சர் விஜித ஹேரத், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பல பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளார்.