பட்டலந்த சித்திரவதை முகாம் குறித்து உண்மையை உடைத்த ரணில்

Ranil Wickremesinghe Sri Lanka Government Batalanda commission Report
By Viro Mar 16, 2025 11:34 AM GMT
Viro

Viro

Report

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பான கருத்துகளை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார்.

பட்டலந்த அறிக்கை தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் விமர்சனங்கள் எழுப்பப்பட்ட நிலையில் இன்று (16) விசேட உரையொன்றை ஆற்றி பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை தான்  நிராகரிப்பதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

பட்டலந்த சித்திரவதை முகாம் குறித்து உண்மையை உடைத்த ரணில் | Ranil Opens Up About Patalanda Torture Camp

 பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கையில் 1988-90 காலகட்டத்தில் ஜே.வி.பி. செய்த கொடூரமான பயங்கரவாத செயல்கள் குறித்தே குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை 

"இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானதன்  பின்னர், ஜே.வி.பி நாடு முழுவதும் பயங்கரவாதத்தை பரப்ப நடவடிக்கை எடுத்தது. அந்த நேரத்தில், நாட்டின் முக்கிய இடங்களைப் பாதுகாக்கும் அதிகாரம் அப்போதைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனவால் அமைச்சரவை அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


பியகம பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், டீசல் மின் உற்பத்தி நிலையம், மகாவலியிலிருந்து கொழும்புக்கு மின்சாரம் வழங்கும் மையம் மற்றும் வணிக வலயம் போன்ற பல பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருந்தன. அப்பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிசாரும், இராணுத்தினரும் வரவழைக்கப்பட்டனர்.

பாதுகாப்புப் படையினர் தங்கியிருப்பதற்காக பட்டலந்தையில், லங்கா உர உற்பத்தி நிறுவனத்திற்குச் சொந்தமான பல கைவிடப்பட்ட கட்டிடங்கள் காணப்பட்டது. கைவிடப்பட்ட கட்டிடங்கள் மற்றும் வீடுகளை பாதுகாப்புப் படையினருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. அந்த நேரத்தில், இலங்கை மின்சார சபையின் பல அதிகாரிகள் ஏற்கனவே அந்த வீடுகளில் பலவற்றில் வசித்து வந்தனர்.

இந்த பயங்கரவாத காலகட்டத்தில், சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கொல்லப்பட்டார். அந்த நேரத்தில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன என்னை அழைத்து, இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக வீட்டு திட்டத்தில் உள்ள வெற்றிடமான வீடுகளை அவர்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி, அப்போதைய கலைப்பாளர், சம்பந்தப்பட்ட வீடுகளை களனி பொலிஸ் கண்காணிப்பாளர் நலின் தெல்கொடவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தார்.

இந்தக் காலகட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் ஒருவர், கூட்டுறவு சபை உறுப்பினர் ஒருவர், ஒரு பொலிஸ் சார்ஜன்ட் உட்பட பலர் படுகொலை செய்யப்பட்டனர். அதே நேரத்தில், மற்றொரு மாகாண சபை உறுப்பினரின் வீடும் தாக்கப்பட்டது.

வீழ்ச்சியடைந்த மக்களின் வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் மீண்டும் கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டில் அமைதியையும் தேசிய பாதுகாப்பையும் உறுதி செய்ய அதிகாரத்தில் இருந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

1994 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பட்டலந்த பகுதியில் சித்திரவதைக் கூடம் இருந்ததா? என்பதை விசாரிக்க சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஒரு ஆணைக்கழுவை அமைத்தார். அதற்குப் பலர் அழைக்கப்பட்டிருந்தனர். நான் அங்கு சாட்சியாக மட்டுமே அழைக்கப்பட்டேன். அந்த நேரத்தில், நான் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.

பட்டலந்த சித்திரவதை முகாம் குறித்து உண்மையை உடைத்த ரணில் | Ranil Opens Up About Patalanda Torture Camp

முழுமையான அரசியல் அவதூறு பிரச்சாரத்தை நோக்கமாகக் கொண்டு பட்டலந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அதன்போது ஒரு அமைச்சர் என்ற வகையில் பட்டலந்தை வீட்டுத் தொகுதியில் சில பொலிஸ் அதிகாரிகளுக்கு நேரடியாக வீடுகளை வழங்கியது தவறு என்று குறிப்பிடப்பட்டது.

பொலிஸ் மா அதிபர் ஊடாக அதனை வழங்கியிருக்கலாம் என்பதே ஆணைக்குழுவின் நிலைப்பாடு. வேறு எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய அனைத்து விடயங்களும் எனக்குப் பொருந்தாது. 

ஆணைக்குழுவின் அறிக்கையின் 3 ஆம் அத்தியாயம், ஜே.வி.பி. செய்த கொடூரமான பயங்கரவாதச் செயல்களை பற்றியே விரிவாக விவரிக்கிறது. முழு வரலாறும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. மேற்கூறியவற்றைத் தவிர, வேறு எந்தக் குற்றச்சாட்டுகளும் நான் பொறுப்பாக மாட்டேன். அந்த அறிக்கையை நான் முழுமையாக நிராகரிக்கிறேன்.

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை மறைத்ததாக யாரும் குற்றம் சாட்ட முடியாது. இது 2000 ஆம் ஆண்டு பாராளுமன்றக் கூட்டத்தொடராக நடத்தப்பட்டது. ஆனால் யாரும் அதைப் பற்றி விவாதிக்கக் கோரவில்லை. குறைந்தபட்சம் ஜே.வி.பி. அப்படி ஒரு கோரிக்கையை வைக்கவில்லை. பலர் அந்த அறிக்கையை ஏற்கவில்லை. எனவே, பாராளுமன்றத்தில் அதைப் பற்றி விவாதிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆட்சிக்கு வந்த எந்த அரசியல் கட்சியும் இந்த அறிக்கையின் மூலம் குறுகிய அரசியல் ஆதாயங்களைப் பெற முயற்சிக்கவில்லை என்று சொல்ல வேண்டும். அதே போன்று நாடாளுமன்ற அமர்வொன்றின் அறிக்கை குறித்து 25 வருடங்களின் பின்னர் நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்தும் சம்பிரதாயம் இதுவரை நம் நாட்டில் இருக்கவில்லை. எனவும் குறிப்பிட்டுள்ளார்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Jaffna, நெடுங்கேணி, கொம்மந்தறை

18 Mar, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், புத்தளம், வவுனியா

18 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், நீர்வேலி தெற்கு

18 Mar, 2015
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சரவணை மேற்கு, நல்லூர், கொட்டாஞ்சேனை, தெஹிவளை

15 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மானிப்பாய்

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

17 Mar, 2010
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊறணி, திருச்சி, India, பரிஸ், France

10 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Ajax, Canada

16 Mar, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

14 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வரணி, Nigeria, சிம்பாப்பே, Zimbabwe, Scarborough, Canada

14 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Guyana, Scarborough, Canada

14 Mar, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

14 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Mississauga, Canada

12 Mar, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Bochum, Germany, London, United Kingdom, Hayes, United Kingdom, Slough, United Kingdom

13 Mar, 2025
மரண அறிவித்தல்

கரணவாய், கீரிமலை, கொக்குவில்

14 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, இரத்மலானை

14 Mar, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

15 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

15 Mar, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம், ஸ்கந்தபுரம், London, United Kingdom

23 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், ஊர்காவற்துறை, பரிஸ், France

04 Mar, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
61ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சேமமடு, ஓமந்தை

15 Feb, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, Markham, Canada

13 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, உடுவில், Scarborough, Canada

12 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada

15 Mar, 2015
மரண அறிவித்தல்

சுழிபுரம், Aubervilliers, France

12 Mar, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Manippay, Urumpirai, Toronto, Canada

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Ivry-sur-Seine, France

11 Mar, 2025
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், திருகோணமலை, சிட்னி, Australia

12 Mar, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், நெடுங்கேணி, திருகோணமலை, நெதர்லாந்து, Netherlands, Milton Keynes, United Kingdom

07 Mar, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

கணுக்கேணி, Münster, Germany, Reading, United Kingdom

05 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US