முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்குள் புகுந்தார் ரணில்!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வசித்த கொழும்பு வீட்டை , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தகவல்க:ள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்ததை அடுத்து, தற்போது அவர் பாதுகாப்பான இடத்தில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மாளிகையும், அலரி மாளிகையும் போராட்டகாரர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் , அந்த இடங்களை பற்றிய அனைத்து தகவல்களும் வெளியாகி பாதுகாப்பான இடமாக இல்லாததாலும் ஜனாதிபதியோ பிரதமரோ அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வசித்த கொழும்பு பேஜெட் வீதியிலுள்ள வீட்டை புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.