ஜனாதிபதி ரணில் தொடர்பில் அவேசமடைந்த முக்கியஸ்தர்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) புனர்வாழ்வளிக்கப்பட்டதாக அண்மையில் வெளியான கருத்துக்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) பதிலளித்துள்ளார்.
மக்கள் முன் செல்வதற்குக் கூட சிரமப்பட்ட அந்த அரசியல்வாதிகள் அனைவருக்கும் புனர்வாழ்வு அளித்தவர் ரணில் விக்கிரமசிங்கவே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு தீவிரமான சூழ்நிலையில் உள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் முன் செல்வதற்கு சிரமப்பட்ட அரசியல்வாதிகள், தற்போது தமது வாகனங்களில் சுதந்திரமாக நடமாடுகின்றனர் அல்லது மேடைகளில் ஏறுகின்றனர்.
இருப்பினும், ரணிலுக்கு புனர்வாழ்வளித்தோம் என்று இப்போது கூறுகின்றனர்.
இந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் புனர்வாழ்வு அளித்தவர் ரணில் விக்கிரமசிங்க என்பதை அவர்களால் இப்போது அதை நினைவில் கொள்ள முடியவில்லை என்று பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.
விக்கிரமசிங்க ராஜபக்ஷ குலத்தின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுகிறார் என்பதையும் அவர் மறுத்துள்ளார்.