இராமேஸ்வரம் - மன்னார் போக்குவரத்து கப்பல் திட்டம் மீண்டும் ஆரம்பம்
இந்திய மத்திய அரசின் அனுமதி கிடைத்ததன் பின்னர் இராமேஸ்வரத்துக்கும் இலங்கையின் தலை மன்னாருக்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என தமிழ் நாட்டின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார்.
இராமேஸ்வரத்தில் புதிய துறைமுக அலுவலகம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, 118 கோடி இந்திய ரூபாய் செலவில், இராமேஸ்வரம் முதல் இலங்கையின் தலைமன்னார் வரையிலான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்திய மத்திய அரசின் அனுமதி கிடைக்கப் பெற்றதன் பின்னர் குறித்த சேவை ஆரம்பிக்கப்படும் என்று தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார்.