ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு சம்பவம்: 4 அதிகாரிகள் அதிரடி கைது!
ரம்புக்கனை போராட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை கேகாலை நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய இடம்பெற்றுள்ளது,
இதேவேளை, மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி கண்டி குண்டசாலை பகுதியில் வைத்து மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரம்புக்கனை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின்போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்திருந்தனர்.
இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.