ரம்புக்கனை சம்பவம் இடம்பெற்று பல மணிநேரம் கடந்து கவலை வெளியிட்ட ஜனாதிபதி
அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை பிரஜைகளின் உரிமைக்கு, இடையூறு ஏற்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Sri Lankan citizens' right to peacefully protest wont be hindered. @SL_PoliceMedia will carry out an impartial & transparent inquiry re the incident at Rambukkana which led to the tragedy for which I’m deeply saddened. I urge all citizens to refrain from violence as they protest.
— Gotabaya Rajapaksa (@GotabayaR) April 20, 2022
ரம்புக்கனையில் நடந்த சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற மற்றும் வெளிப்படையான விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ள்வார்கள் என தெரிவித்த கோட்டாபய, இந்த துயரச் சம்பவம் தொடர்பில் தான் கவலையடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்ப்பு தெரிவிக்கும் அனைத்து பொதுமக்களும் வன்முறையை தவிர்க்குமாறும் ஜனாதிபதி அந்த பதிவில் மேலும் கோரியுள்ளார்.
அதேவேளை நேற்றுமாலை ரம்புக்கனையில் ஆர்ப்பாடக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாகி பியயோகம் மேற்கொண்ட நிலையில் ஒருவர் பலியாதுடன், காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் இடம்பெற்று பலமணை நேரம் கடந்த பின்னரே ஜனாதிபதி கோட்டாபய அது குறித்து கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.