மது போதையில் பஸ்ஸை பறக்கவிட்ட சாரதி ; கடும் அவதிப்பட்ட பயணிகள்
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் சாரதி மதுபோதையில் வாகனம் செலுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயணிகளை ஏற்றிக்கொண்டு ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து, கம்பளை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட வழக்கமான சோதனையின் போது நிறுத்தி பரிசோதிக்கப்பட்டது.

மதுபோதை
அப்போது, பேருந்தை இயக்கிய சாரதி மதுபோதையில் இருந்தது கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, கம்பளை போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் சாரதியை உடனடியாக கைது செய்ததுடன், சம்பந்தப்பட்ட பேருந்தையும் கம்பளை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
மதுபோதையில் இருந்த நிலையிலும் பொதுமக்களை ஏற்றிக்கொண்டு பேருந்தை செலுத்தியிருந்தமை கடுமையான பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.