கண்ணீருக்கு மத்தியில் உயிரிழந்த சமிந்தவின் இறுதிக்கிரியைகள்!(Photos) இணைப்பு
ரம்புக்கனையில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது பொலிஸாரால் மிலேச்சத்தனமாக சுட்டுக்கொல்லப்பட்ட சமிந்த லக்ஷானின் சடலம் நேற்றிரவு நாரம்பெத்தவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
கண்ணீருக்கு மத்தியில் இன்று அவரது பூதவுடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் கேகாலை மாவட்டம் உட்பட ரம்புக்கன பிரதேசத்தின் பல பொலிஸ் பிரதேசங்களில் நடவடிக்கை முடியும் வரை படையினர் பாதுகாப்பு படையினரை நிலைநிறுத்தியுள்ளனர்.
அவரது மரணம் மற்றும் ரம்புக்கனை சம்பவம் தொடர்பிலான நீதி விசாரணைகள் இன்று தொடரவுள்ளன.
கடந்த 19 ஆம் திகதி ரம்புக்கனையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் துப்பாக்கி சூடு மேற்கொண்டதில் குறித்த நபர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
ரம்புக்கனையில் உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகள் இன்று! இராணுவத்தினர் குவிப்பு


