"இது தான் இவரது கடைசி பாடலாக இருக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை"....எஸ்பிபி குறித்து ரஜினியின் உருக்கமான பதிவு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் "அண்ணாத்த" .
இதில் கீர்த்தி சுரேஷ், சூரி, குஷ்பு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு முதல் முறையாக ரஜினிகாந்த் அவர்களுக்கு இசையமைப்பாளர் இமான் அவர்கள் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று மாலை 6 மணியளவில் அண்ணாத்த படத்தின் சிங்கள் ட்ராக் வெளியாகியுள்ளது. இந்த பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்கள் பாடியுள்ளார். ரஜினிகாந்த் அவர்களுக்காக கடந்த 45 வருடங்களாக பாடல்களைப் பாடிவந்த எஸ்.பி.பி அவர்கள் கடந்தாண்டு உடல்நலக் குறைவாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தினாலும் உயிரிழந்தார்.
இந்த நிலையில் தற்போது அண்ணாத்த படத்தில் ரஜினிக்காக எஸ்.பி.பி அவர்கள் பாடிய "அண்ணாத்த அண்ணாத்த" சிங்கள் ட்ராக் வெளியாகியுள்ளது. இந்த பாடல் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த பாடல் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்ததாவது,
“45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காக பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்கு பாடும் கடைசி பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
எஸ்.பி.பி அவர்கள் நம்மை விட்டு பிரிந்தாலும் அவரது தனித்துவமான பாடல்களின் வாயிலாக அவர் காலம் கடந்தும் நம்மோடு வாழ்வார்.