பிரபாகரனை விட ராஜபக்க்ஷர்களே மோசமானவர்கள்!
நாட்டின் பொருளாதாரத்துக்கும் விவசாயத்துறைக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அத்துடன் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை விட ராஜபக்க்ஷர்களும் அவர்களது சகாக்களும் நாட்டுக்கு தீங்கிழைத்துள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வரலாற்று காலம் தொடக்கம் இலங்கையை ஆக்கிரமித்தவர்களை விட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் இரண்டாண்டு கால நிர்வாகம் விவசாயத்துறைக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு அரச நிர்வாகம் தொடர்பில் தெளிவில்லாத காரணத்தினால் அவர் சிவில் சேவைகளுக்கு இராணுவத்தினரை நியமிக்கிறார் என்றும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.