ரணிலின் உதவியுடன் மீண்டும் எழுச்சிப்பெற முயலும் ராஜபக்சர்கள்!
நாட்டை கடுமையான நெருக்கடி நிலைக்கு தள்ளிய ராஜபக்ச குடும்பம் தற்போதைய ஜனாதிபதி ரணிலின் பலத்துடன் மீண்டும் இந்நாட்டில் எழ முயல்வதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
'இந்த ஜனாதிபதி நியமிக்கப்பட்டது நாட்டை கட்டியெழுப்புவதற்காக அல்ல. நாட்டை அழித்த ராஜபக்சர்களை பாதுகாக்கவே நியமிக்கப்பட்டுள்ளார்.
எனவே இந்த மக்கள் ஒடுக்கு முறை யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, மக்கள் சார் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் .' என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
