எல் நினோவால் ஒக்டோபர், நவம்பரில் சராசரியை விட அதிக மழை
Climate Change
Weather
El Niño
By Sulokshi
தற்போது நிலவும் எல் நினோவுடன் தொடர்புடைய வானிலை மாற்றத்தின் காரணமாக, இலங்கையில் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சராசரியை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது .
வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன இது குறித்து குறிப்பிடுகையில், இலங்கையின் ஆண்டு மழைவீழ்ச்சியில் சுமார் 30 சதவீதம் இந்த இரண்டு மாதங்களில் பொதுவாகப் பெய்யும்.

வழக்கத்தை விட கனமழையால் நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும். டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் எல் நினோவின் தாக்கங்கள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அஜித் விஜேமன்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US