நாட்டின் பல பகுதிகளில் 19ஆம் திகதி வரை மழை
நாட்டின் வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, தெற்கு, வடமத்திய மாகாணங்களுக்கு மிதமானது முதல் கனமானது வரை மழை இன்று (16) முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடரும் என யாழ். பல்கலைக்கழக புவியற்திறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கு, ஊவா, மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளுக்கு சற்று பலமான காற்று வீசும் வாய்ப்புள்ளது. குறிப்பாக மணிக்கு 30- 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

30- 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்
அதேவேளை கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, கேகாலை, குருநாகல் மாவட்டஙகளின் சில பகுதிகளில் நிலச்சரிவு அனர்த்தங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் உண்டு.
மேற்கூறிய மாவட்டங்களில் உள்ள மக்கள் எதிர்வரும் 19ஆம் திகதி வரை கன மழை மற்றும் அதனோடு இணைந்த நிலச்சரிவு தொடர்பில் அவதானமாகவும் எச்சரிக்கை உணர்வோடும் இருப்பது அவசியம்.

வடக்கு, கிழக்கு, மற்றும் வட மத்திய மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள பல குளங்கள் வான் பாய்ந்து கொண்டிருக்கின்றன. வான் பாயும் நிலையிலும் உள்ளன.
இதனால் அடுத்துவரும் நாட்களில் கிடைக்கும் மழை இந்தக் குளங்களின் வான் பாயும் நீரின் அளவை அதிகரிக்க கூடும் எனவும் யாழ். பல்கலைக்கழக புவியற்திறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.