உறங்கியவர்கள் பணி இடைநீக்கம்!
கண்டி பிரதான புகையிரத நிலையத்தில் கவனக்குறைவாகச் செயற்பட்ட புகையிரத சமிக்ஞைகளைக் கையாளும் பணியாளர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பொடிமெனிக்கே புகையிரதம் பயணித்த போது சமிக்ஞைகளைக் கையாளும் கடமையிலிருந்த இருவரும் உறங்கிய நிலையில், குறித்த புகையிரதம் கண்டி புகையிரத நிலையத்தின் 3ஆவது மேடையை சென்றடைந்தது.
அந்த நேரத்தில் புகையிரத சமிக்ஞைகள் உரிய முறையில் ஒளிரவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மேடையில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு புகையிரதத்துடன் மோதி ஏற்படவிருந்த விபத்து, புகையிரத சாரதியின் சாதுரியத்தால் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத சமிக்ஞைகளைக் கையாளும் பணியாளர்களின் கவனக்குறைவினாலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரியவந்தள்ளது. சம்பவத்தை அடுத்து புகையிரத சமிக்ஞைகளைக் கையாளும் பணியாளர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.