மலையக ரயில் சேவைகள் தொடர்பில் ரயில்வே திணைக்களத்தின் அவசர தீர்ப்பு
நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்தில் கொண்டு, மலையக மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் அனைத்து ரயில்களையும் கொழும்பு கோட்டை - நானுஓயா மற்றும் நானுஓயா - கொழும்பு கோட்டை வரை மட்டுப்படுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, நாளை (27) காலை கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கவிருந்த பொடி மெனிகே (காலை 5.55), உடரட மெனிகே (காலை 8.30) மற்றும் காலை 9.45 மணிக்கு புறப்படவிருந்த ரயில்கள் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுமே பயணிக்கும்.

அதேபோல், கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கும் கண்டி ஒடிஸி (காலை 9.40) ரயிலானது நானுஓயா வரை மட்டுமே பயணிக்கும்.
இதற்கு மேலதிகமாக உடரட மெனிகே (காலை 9.20), கண்டி ஒடிஸி (காலை 11.00), பொடி மெனிகே (பகல் 12.15) மற்றும் பிற்பகல் 2.16 மணிக்கான ரயில்கள் நானுஓயாவிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும்.
சீரற்ற வானிலை நீங்கும் வரை மேற்கண்டவாறு செயல்பட ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.