கொழும்பில் 3 பிரதேசங்களில் திடீர் சேதனை...2 பெண்கள் உட்பட 28 பேர் அதிரடி கைது!
கொழும்பில் உள்ள கடலோர பொலிஸ் பிரிவின் 3 பிரதேசங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 2 பெண்கள் உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில் 12 சந்தேக நபர்கள் இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கை ஜம்பட்டா வீதி, புனித அந்தோணி வீதி மற்றும் ரத்னம் வீதி 44 தோட்டப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 12,900 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 5,900 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 10 கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்ட சுமார் 40 வீடுகள் மற்றும் வீதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான நபர்களை முழுமையாக சோதனையிட்டதில் குறித்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறக்குறைய 2 மணித்தியாலங்கள் நீடித்த இந்த நடவடிக்கைக்கு "அமாய்" என்ற மோப்ப நாயும் பயன்படுத்தப்பட்டதுடன், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட சுமார் 50 பொலிஸ் அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.