ராகுவால் 18 ஆண்டுகள் கழித்து கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகும் ராசிக்காரர்கள்
வேத ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் ராகு. இந்த ராகு மற்ற கிரகங்களைப் போல் நேர்கதியில் பயணிக்காமல் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிப்பார். ராகு. ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார் மற்றும் இவர் ஒரு சுழற்சியை முடிக்க 18 ஆண்டுகள் ஆகும்.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த ராகுவின் ராசி மாற்றத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். குறிப்பாக நிதி நிலையில் எதிர்பாராத அளவில் முன்னேற்றத்தைக் காணவுள்ளனர். இப்போது 18 ஆண்டுகளுக்கு பின் மகர ராசிக்கு செல்லும் ராகுவால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

| மிதுனம் | 2026-ல் நடக்கும் ராகு பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். அதுவும் எதிர்பாராத வகையில் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். மனதில் உள்ள பல ஆசைகள் நிறைவேறும். பணியிடத்தில் உங்களின் இலக்குகளை அடைந்து, தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். |
| துலாம் | 2026-ல் நடக்கும் ராகு பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணியிடத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. திடீரென்று நிதி ஆதாயங்கள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும் |
| விருச்சிகம் | 2026-ல் நடக்கும் ராகு பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதோடு, முன்னேற்றமும் ஏற்படும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். புதிய வருமான ஆதாரங்களும் உருவாகும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். |