ராகு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம் ; கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
வேத ஜோதிடத்தில் ராகு ஒரு நிழல் கிரகமாகும். இந்த ராகு ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். மேலும் இவர் எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் தான் பயணிப்பார். தற்போது ராகு கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் மே 10 ஆம் திகதி கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் கும்ப ராசியில் ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கிரகண யோகம் உருவாகவுள்ளது.
இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு சிறப்பாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படும்.

வேலையில் தடைகளை சந்திக்க நேரிடும். உறவுகளில் விரிசல் ஏற்படலாம். இப்போது மே 10 ஆம் திகதி கும்ப ராசியில் ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
கடகம்
ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகத்தால் கடக ராசிக்காரர்கள் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். செய்யும் வேலை மற்றும் தொழிலில் ஆர்வம் குறையக்கூடும். இதனால் உங்களின் வேலை முடிவடையாமல் நிலுவையில் இருக்கும். நிலம் அல்லது சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்காக நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியிருக்கும். இக்காலத்தில் உங்களை நீங்களே வருத்திக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் சிரமப்படக்கூடும்.

கன்னி
ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகத்தால் கன்னி ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த ஒரு அவசர முடிவுகளை எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். நிதி விஷயங்களில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திப்பீர்கள். உடல் நலம் மற்றும் தினசரி வழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். அவற்றைப் புறக்கணித்தால் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில் மற்றும் வணிக முடிவுகளை எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக எந்த ஒரு பிரச்சனையையும் பேசி தீர்க்க முயற்சிக்க வேண்டும்.

கும்பம்
ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகத்தால் கும்ப ராசிக்காரர்கள் வாழ்க்கையில் திடீர் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். காதல் வாழ்க்கையில் பிரச்சனைகள் தலைத்தூக்கும். அகங்காரம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உறவில் விரிசல் ஏற்படும். யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். இல்லாவிட்டால் பெரிய ஏமாற்றத்தை சந்திப்பீர்கள். பணியிடத்தில் அழுத்தம் அதிகரிக்கும். உங்களின் திட்டங்களை அல்லது யோசனைகளை யாருடனும் இக்காலத்தில் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
