குவிந்த உலகத் தலைவர்கள்; ராணியின் உடல் நள்ளிரவு 12 மணிக்கு நல்லடக்கம்
இங்கிலாந்து ராணியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட இருக்கும் நிலையில் லண்டனில் உலக தலைவர்கள் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
கடந்த 8ஆம் தேதி இங்கிலாந்து ராணி எலிசம்பெத் அவர்கள் வயது முதிர்வு காரணமாக காலமானார்.
நள்ளிரவு 12 மணிக்கு நல்லடக்கம்
இதனையடுத்து அவரது உடல் லண்டனில் வைக்கப்பட்டுள்ளது இன்று இரவு 8 மணிக்கு லண்டனில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆலயத்திற்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், இன்று நள்ளிரவு 12 மணிக்கு தேவாலயத்தின் கீழே உள்ள கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் அவர்களின் கல்லறையும் அங்கேதான் உள்ளதாகவும் அதன் அருகே தான் ராணி உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் உலகின் பல நாடுகளின் தலைவர்களும் அங்கு சென்றுள்ள நிலையில் உலக தலைவர்கள் ராணியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.