QR குறியீட்டில் அரங்கேறிய மோசடி ; சிக்கிய சந்தேக நபர்
பெண்ணொருவருக்குச் சொந்தமான வாகனத்தின் தரவுகளைப் பயன்படுத்தி, QR குறியீட்டை உருவாக்கி சட்ட விரோதமாக எரிபொருள் பெற்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

QR குறியீடு
1919 எனும் அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட இந்த QR குறியீட்டைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகித்த நபர்களை அடையாளம் காணும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், நாடு முழுவதும் இவ்வாறான QR குறியீடு மாற்றியமைப்பு மற்றும் மோசடிகளில் ஈடுபடும் ஏனைய கும்பல்களைக் கண்டறிய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.