அபாய ஒலிகளால் அதிரும் மத்தியக்கிழக்கு ; இஸ்ரேலின் முக்கிய பகுதிகளை பதம் பார்த்த ஈரான்
இஸ்ரேல் - ஈரான் போர் 26-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் மிக முக்கிய எரிசக்தி மையமான ஹதேரா மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் நடத்தியுள்ள ஏவுகணைத் தாக்குதல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் மற்றும் இஸ்ரேலின் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி,

அபாய எச்சரிக்கை
இன்று ஈரானில் இருந்து சுமார் 25 ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டுள்ளன. ஹதேரா நகரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தை ஒரு ஏவுகணை நேரடியாகத் தாக்கியுள்ளது.
இதனால் அந்த ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு, வானை முட்டும் அளவிற்குப் புகை மூட்டம் எழுந்து வருகிறது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து வடக்கு மற்றும் மத்திய இஸ்ரேலின் முக்கிய நகரங்களான டெல் அவிவ், ஹதேரா மற்றும் சிசேரியா ஆகிய பகுதிகளில் அபாய எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டுள்ளன.
மின் உற்பத்தி நிலையம் தாக்கப்பட்டதால், இஸ்ரேலின் மின் விநியோகக் கட்டமைப்பில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.