வெலிவேரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு: வெளியான புதிய தகவல்
புத்தளம் மாவட்டம் - வெலிவேரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இன்றைய தினம் (05-08-2023) காலை வெலிவேரிய, அம்பறலுவ வீதி ஜூபிலி மாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காரில் பயணித்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்த வந்தவர்கள் மோட்டார் சைக்கிளை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு சிறிய லொறியொன்றில் ஏறி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரின் ஒரு கையில் துப்பாக்கிச் சூட்டு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் திட்டமிட்ட குற்றவாளியாக கருதப்படும் "கெஹெல்பத்தர பத்மே" என்பவரால் இந்த துப்பாக்கிச் சூடு வழிநடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் "பஸ்போட்டா" என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் சாரதியாக பணியாற்றியவர் என்றும் தெரியவந்துள்ளது.