சட்டவிரோதமான செயலில் ஈடுபட்ட நபர்: பொலிஸார் அதிரடி நடவடிக்கை
புத்தளம் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டம் ஒன்றில் கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் இன்றைய தினம் (03-01-2023) நவகத்தேகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கஞ்சாச் செடிகள் சட்டவிரோதமாக வளர்க்கப்படுவதாக பொலிஸாருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது 10 அடி நீளமுடைய 6 கஞ்சாச் செடிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நவகத்தேகம கொங்கடவல பகுதியைச் சேர்ந்த ஒருவரென பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட கஞ்சாச் செடிகள் ஆகியவற்றையும் ஆனமடுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.