தனிமையில் முடங்கிய புடின்; வெளியான இரகசிய தகவல்
ரஷ்ய அதிபர் புடின் யாரையும் சந்திக்காமல் தனிமையில் முடங்கிவிட்டதாகவும், இது நல்ல அறிகுறி கிடையாது என்றும் அமெரிக்காவை சேர்ந்த செனட்டர்கள் உள்ளிட்ட சில மூத்த தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றன. கடந்த 24 மணி நேரமாக கீவில் முன்னேற முடியாமல் ரஷ்ய படைகள் அங்கேயே முகாமிட்டுள்ளன.
இன்னொரு பக்கம் கர்கிவ் உள்ளிட்ட நகரங்களில் ரஷ்ய படைகள் கடுமையான ஏவுகணை மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றன. உக்ரைன் படைகளுக்கு இதுவரை 31 நாடுகள் ராணுவ உதவிகளை அளிப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் யாரையும் சந்திக்காமல் தனிமையில் முடங்கிவிட்டதாக அமெரிக்க செனட்டர் மார்க் வார்னர் உட்பட சில மூத்த அமெரிக்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு வகையில் நல்ல விஷயம் கிடையாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். என்பிசி தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க செனட்டர் மார்க் வார்னர் உட்பட செனட்டர்கள், முன்னாள் சிஐஏ இயக்குனர் ஜான் உள்ளிட்டோர் குறிப்பிட்டதாவது, ரஷ்ய அதிபர் புடினின் குணம் மாறியுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய ராணுவம் திணறுவதை பார்த்து அவர் கடும் கோபத்தில் இருக்கிறார். இதனால் உக்ரைன் மீது கடும் தாக்குதலை, வன்முறையை ஏவி விட புடின் நினைக்கலாம். தனது ராணுவ தாக்குதலை அவர் இரட்டிப்பாக்கலாம். அவர் தனியாக இருக்கிறார். அவர் க்ரேமிலின் பகுதியில் இல்லை. மாறாக தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறார்.
அவர் தனக்கு கீழ் இருக்கும் சிலருக்கு சில உத்தரவுகளை பிறப்பிக்கிறார். அந்த உத்தரவுகளை அவர்கள் ராணுவத்திற்கு தெரிவிக்கின்றனர். தனக்கு கீழே இருக்கும் அவர்களிடம் புடின் மிக தீவிரமாக கோபம் அடைகிறார்.
இதன்படி அவர் மன அழுத்தத்தில் இருப்பது போல செயல்படுகிறார். அவர் இப்போது ஒரு மூலையில் முடங்கிவிட்டாரோ என்று நினைக்க தோன்றுகிறது. அவர் வெளியேற வாய்ப்பே இல்லை. மேற்கு உலக உளவு நிறுவனங்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
அவர் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் உளவுத்துறைக்கு தெரியும். அவரின் குணாதிசயங்களில் பெரிய மாற்றம் ஏற்பட்டு இருப்பதை உளவு நிறுவனங்கள் நம்மிடம் தெரிவித்துள்ளன. இந்த சூழலில் அவர் மனநலம் குன்றிவிட்டதாக கூற முடியாது. ஆனால் அவர் மிக வித்தியாசமான குணாதிசயங்களை வெளிப்படுத்துகிறார்.
முன்பு இருந்ததை போல அவர் இல்லை. அவர் அதிகம் கோபம் அடைகிறார். இயல்பிற்கு மீறிய வகையில் சீற்றம் அடைகிறார். தனக்கு உள்ளே இருக்கும் வட்டத்தில் உள்ளவர்களிடம் கடுமையாக கோபம் அடைகிறார். அவர் ரஷ்ய ராணுவத்தின் செயலாலும், உலக அளவிலான எதிர்ப்பு காரணமாகவும் விரக்தியில் இருக்கிறார்.
இதற்கு முன் இருந்த புடின் திறமையானவர். முன்னெல்லாம் அவர் கோபம் அடைய மாட்டார். உணர்வுகளை கட்டுப்படுத்துவார். இது முன்பு இருந்தது போல இறுக்கமான மனம் கொண்ட, வலிமையான நபர் இணையும் அவர் கிடையாது. அவர் இப்போது தனிமையில் இருப்பதுதான் மிகுந்த சந்தேகம் அளிக்கிறது. அவருக்கு எதோ நடக்கிறது.
அதுதான் மிகவும் கவலை அளிக்க கூடிய விஷயம். உலக அளவில் என்ன நடக்கிறது என்பது அவருக்கு தெரியவில்லையோ என்ற கவலை அளிக்கிறது. இதற்கு முன் இருந்த புடின் இறுக்கமான இதயம் கொண்டவர். அவர் ஆபத்தானவர். ஆனால் இவர் இன்னும் ஆபத்தானவர்.
அவர் தற்போது பொருளாதார ரீதியாக, ராணுவ ரீதியாக புடின் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவரிடம் எதோ ஒன்று மிஸ்ஸாகிறது. அதுதான் கவலை அளிக்கிறது. அவர் நிலையான முடிவு எடுக்கும் நிலையில் இருக்கிறாரா என்பது சந்தேகம் அளிக்கிறது என்று என்பிசி விவாதத்தில் அமெரிக்க தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.