பொருளாதார தடையை நீக்கினால் நினைத்தது நடக்கும் - புடின்
துறைமுகங்களை திறக்க விரும்பினால் உக்ரைன் மீதான பொருளாதார தடைகளை நீக்குவதாக ரஷ்யா கூறியுள்ளது.
உலகின் முன்னணி உணவு தானிய உற்பத்தியாளர்களில் ஒன்றான உக்ரைனில் உள்ள முக்கிய துறைமுகங்களை ரஷ்யாவின் ராணுவம் அபகரித்துள்ளது. உலகளாவிய உணவுப் பற்றாக்குறையைத் தொடர்ந்து உக்ரைனில் உள்ள துறைமுகங்களை மீண்டும் திறக்குமாறு ரஷ்யாவிடம் ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
"ரஷ்ய அதிபர் புடினுக்கு இதயம் இருந்தால், உக்ரைனில் துறைமுகங்களைத் திறக்குமாறு நான் அவரை வலியுறுத்துகிறேன்" என்று ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் தலைவர் டேவிட் பீஸ்லி கூறினார்.
இதன் மூலம் ஏழைகளுக்கு உணவளித்து, கடும் பஞ்சத்தைத் தவிர்க்க முடியும் என்றார்.
உக்ரைன் துறைமுகங்களை மீண்டும் திறக்க விரும்பினால் அதன் மீதான தடைகளை நீக்குவதாக ரஷ்யா கூறியதாக Interfax செய்தி வெளியிட்டுள்ளது.