புதன் உருவாக்கும் நீச்சபங்க ராஜயோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன் சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் தனது நிலையை மாற்றக்கூடியவர்.

இந்நிலையில் ஏப்ரல் 11 ஆம் திகதி புதன் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். மீன ராசியானது புதன் நீச்சமடையும் ராசியாகும். இந்த மீன ராசிக்குள் புதன் நுழைவதால் நீச்சபங்க ராஜயோகம் உருவாகவுள்ளது.
இப்போது மீன ராசிக்கு செல்லும் புதனால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகத்தால் தொழில் ரீதியாக அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

| மிதுனம் | நீச்சபங்க ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்களின் புத்திசாலித்தனமும், தொடர்பு கொள்ளும் திறனும் மேம்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணியிடத்தில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். வேலைப்பளு அதிகரித்தாலும், உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். இருப்பினும், ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை தலைவலி, தூக்கமின்மை, உடல் சோர்வு போன்றவற்றால் அவதிப்படக்கூடும். முக்கியமாக இக்காலத்தில் அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். |
| தனுசு | நீச்சபங்க ராஜயோகத்தால் தனுசு ராசிக்காரர்கள் தங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால் குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். முடிவு எடுப்பதில் குழப்பத்தை சந்திக்கலாம். திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும் வாய்ப்புள்ளது. எனவே பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். |
| மீனம் | நீச்சபங்க ராஜயோகத்தால் மீன ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக நடக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். உறவுகள் வலுவடையும். ஆனால் புதன் பலவீனமான நிலையில் இருப்பதால், குழப்பம், முடிவெடுப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். கண்மூடித்தனமாக யாரையும் நம்புவதைத் தவிர்க்க வேண்டும். பண விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். முதலீடுகளை அவசரப்பட்டு செய்வதைத் தவிர்க்க வேண்டும் |