புதனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
நவகிரகங்களில் புதன் கிரகங்களின் இளவரசர் என்று அழைக்கப்படுகிறது. எனவே புதனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிடரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

ஏப்ரல் 13 அன்று அறிவு மற்றும் தகவல் தொடர்ன் கிரகமான புதன், சனிபகவானால் ஆளப்படும் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறது.
புதனின் இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான நன்மைகளையும், கூடுதல் அதிர்ஷ்டத்தையும் தரப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

| மிதுனம் | புதனின் இந்த நட்சத்திர மாற்றமானது மிதுன ராசியினருக்குப் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைத் திறந்துவிடக்கூடும். தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் மற்றும் ஊதிய உயர்வு என பல்வேறு வழிகளில் வெற்றி கிட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வாழ்க்கையில் நல்ல அனுபவங்கள் காத்திருக்கிறது. வீட்டில் நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். உறவினர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். வெளியூரில் வேலை பார்ப்பவர்களுக்கு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். புதனின் ராசி மாற்றத்தால் அவர்களின் தலைமைத்துவ பண்புகள் அதிகரிக்கும், இதனால் அவர்களிடம் ஒரு பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்படும். மேலதிகாரிகளுடனான உறவு மிகவும் சிறப்பாக மாறும். வணிகர்கள் இந்த காலகட்டத்தில் மிகப்பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம். மாணவர்களுக்கு இந்த காலகட்டம் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு சரியான உதவிகள் கிடைக்கும். புதிய முதலீடுகளை செய்வதற்கு இது சரியான நேரமாக இருக்கும். |
| சிம்மம் | சிம்ம ராசியினருக்கு, இந்த கிரகப் பெயர்ச்சியானது நம்பிக்கைக்குரிய பலன்களைத் தரப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வயதில் மூத்தவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுவது வெற்றிக்கு வழிவகுக்கும். பணியிடத்தில் காத்திருந்த பதவி உயர்வு இறுதியாக கைக்கு கிடைக்கக்கூடும். இந்த காலகட்டத்தில் அவர்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி மற்றும் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் எதிர்பார்த்த மாற்றங்களும், ஆதாயங்களும் ஏற்படும். மேலதிகாரிகளின் உதவியால் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் உங்களின் புதிய அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். பணம் சம்பாதிக்க புதிய வழிகள் தோன்றும். நீங்கள் பொருளாதாரரீதியாக பெரும் முன்னேற்றம் அடையலாம். திருமண வாழ்வில் மகிழ்ச்சியும் ஒத்துழைப்பும் அதிகரிக்கும். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். |
| மகரம் | மகர ராசியினர் இக்காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க நன்மைகளைப் பெறக்கூடும். தொழில் வாழ்க்கையில் எதிரிகளை வீழ்த்தி பெரிய வெற்றிகளைக் குவிக்கலாம். அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் அதிர்ஷ்டம் உறுதுணையாக நிற்கும். அவர்களின் கடின உழைப்பிற்குப் பலன் கிடைத்து, பல்வேறு துறைகளில் அவர்கள் வெற்றிகளைக் குவிப்பார்கள். அவர்கள் தங்கள் இலக்குகளை அடையும் முயற்சியில் இப்போது மிகவும் வேகமாக இருப்பார்கள். செல்வாக்கு மிக்கவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வது அவர்கள் வாழ்க்கையில் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவருகிறது. அங்கீகாரமும், புகழும் தேடி வரப்போகிறது. புதனின் இந்த நட்சத்திர பெயர்ச்சி உறவுகளில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் அவர்கள் வாழ்க்கையில் அமைதி மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும். |