புதன் குரு வக்ர நிலையால் கஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்
இந்த நவம்பர் மாதத்தில் புதன் மற்றும் குரு பகவான் வக்ர நிலைக்கு மாறுவதால் இந்த ராசிகளுக்கு அதிக பிரச்னைகள் ஏற்படலாம். எனவே அவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
புதன் கிரகங்களின் இளவரசராக அறியப்படுகிறது. குரு பகவான் பொருளாதாரம், வேலை, பேச்சாற்றல், கல்வி ஆகியவற்றுக்கு துணை இருப்பார்.
இந்த இரண்டும் வக்ர நிலைக்கு வருவதால் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதில் வரும் நவ. 26ஆம் தேதி புதன் வக்ர நிலைக்கு மாற்றமடைகிறார். அதே நேரத்தில் குரு பகவானும் ஏற்கனவே வக்ர நிலையில்தான் இருக்கிறது.
இந்த புதன் குரு வக்ர நிலையில் கஷ்டத்தை அனுபவிக்க போகும் அந்த 3 ராசிகளும் எவை என நாம் இங்கு பார்போம்.
மேஷம்
புதன் மற்றும் குரு பகவானின் வக்ர நிலையால் இந்த ராசிக்காரர்களுக்கு கஷ்ட காலம். இந்த காலகட்டத்தில் நீங்கள் நம்பிக்கையை இழப்பீர்கள். வேலையில் பிரச்னைகள் அதிகரிக்கலாம். தற்போதைக்கு எதிலும் முதலீடு செய்ய வேண்டாம், நினைத்த பலன்கள் கிடைக்காமல் கூட போகலாம். உங்கள் செலவுகளில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் பொருளாதாரமும் பாதிக்கப்படலாம்.
கடகம்
இந்த நேரத்தில் கடக ராசிக்காரர்கள் தங்களது வாழ்வில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். பணியிடத்தில் நீங்கள் கூடுதல் சிரத்தையுடன் இருக்க வேண்டும். பிறருக்கு உங்கள் பணத்தில் கடன் கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள். மன அழுத்தத்தை நீங்கள் சந்திக்க நேரிடலாம். உடல்நலனிலும் பிரச்னைகள் வரலாம்.
துலாம்
இந்த ராசிக்காரர்களின் பொருளாதார சூழலில் மிகவும் பாதிக்கப்படலாம். திருமணம் செய்தோரின் வாழ்விலும் பிரச்னைகள் வரலாம். வணிகம் செய்வோருக்கு நஷ்டம் ஏற்படலாம். குடும்பத்திலும் சச்சரவு வரலாம். வேலையிலும், உங்கள் முதலாளியிடமும் கவனமாக இருக்க வேண்டும்.