வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட வங்கிச் சேவைகள்
இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மற்றும் சில வங்கி தொழிற்சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம் செய்ய தீர்மானித்துள்ளன.
திட்டமிட்ட வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல பொது மற்றும் தனியார் வங்கிகள் மூடப்படும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. காலை 10.00 மணிக்கு பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்படும் என இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கியும் டோக்கன் வேலைநிறுத்தம் காரணமாக அதன் பல சேவைகளை கட்டுப்படுத்தும் முடிவை அறிவித்துள்ளது.
அரச, அரை அரச, பொது மற்றும் பெருந்தோட்டத் துறைகளைச் சேர்ந்த சில தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில் வங்கித் துறை வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது.