மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியை தனதாக்கிய பஞ்சாப் கிங்ஸ்
18 ஆவது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள 69ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
இரு அணிகளும் ப்ளே ஓப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்டன.
இருப்பினும் புள்ளி பட்டியலில் 2ஆம் இடத்தை பிடிப்பதற்கு இந்த போட்டியின் முடிவு அவசியமாகும்.
இதையடுத்து இந்த போட்டியிற்கான நாணயசுழற்சியில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுகளட இழப்பிற்கு 184 ஓட்டங்களை பெற்று பஞ்சாப் அணிக்கு 185 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
185 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 18 ஆவது ஓவர் நிறைவில் 03 விக்கெட்டுகளையும் இழந்து 187 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது