மருதமுனை பிரபல ஆண்கள் மத்ரஸாவில் மாணவர்களிற்கு நேர்ந்த கதி! வெளியான அதிர்ச்சி வீடியோ
மருதமுனையில் உள்ள பிரபல ஆண்கள் மதரஸாவில் கற்கும் மாணவர்களை சுட்டெரிக்கும் வெயில் என்று பாராமல் இந்த நோன்பு காலம் முழங்காலிட செய்து தண்டனை வழங்கும் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் நேரில் பார்த்த ஒருவர் சிறார்களை இவ்வாறு வெளியில் ழுழங்காலிட செய்வது பாவமில்லையா என்று கேட்டதற்கு அதை கேட்க நீங்கள் யார் என்று ஆலிம் அல்லது மொளலவி கேட்டது அதிர்ச்சியை அளித்துள்ளது.
இச்சம்பவம் கடந்த ஆண்டு கம்முனையில் உள்ள மதரஸாவில் காத்தான்குடியை சேர்ந்த மாணவனின் மரணத்தை நினைவுப்படுத்துகிறது.
இப்படி முறையான பயிற்சிகளை பெறாத மதரஸாவை நடத்துகின்றவர்கள் ஒரு மதரஸாவில் ஐந்து வருடம் கற்றுவிட்டு வந்து மத்ரஸா என்ற பேரவையில் தொழில் நடாத்துவதற்காக இயக்கி வருகின்றனர்.
இந்த மதரஸாவை கண்காணிக்கக்கூட அரச நிறுவனங்கள், குறித்த மதரஸாவில் மாணவர்களை எப்படி நடத்துகின்றார்கள், அவர்களின் உணவு விடயங்கள், கல்வி விடயங்கள் சம்மந்தமாக கண்காணிக்கக்கூடிய எந்த ஒரு கட்டமைப்பும் இலங்கையில் இல்லை.
மதரஸா ஆட்களை ஒண்றினைந்து மாணவர்களுக்கு எவ்வாறான பாடங்களை போதிக்கிறார்கள் என்று கூட பார்ப்பது இல்லை.
இவ்வாறான நிலையில் மதரஸா இருக்கும் மாணவர்கள் அங்கு இருக்க முடியாமல் வாழ முடியாமல் தப்பியோடிவரும் சூழலும் இலங்கையில் இருக்கின்றன.
மத்ரஸாவில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பெற்றோர்களுக்கு தெரிவிப்பதற்க்கு கூட அவர்களிடம் ஒரு போன் வசதியில்லை.
மேலும் மதரஸாவில் எதாவது சம்பவம் நடாத்தல் அதை பெற்றோருக்கு அறிவிப்பதற்கும் வாய்ப்பு இல்லை. இப்படியொரு தவறான வழிநடத்தல் தான் இலங்கையில் இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை கடந்த வருடம் மத்ரஸா ஒன்றில் மர்மமான முறையில் மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பேசுபொருளாக இருந்தது. இச்சமப்வம் தொடர்பான ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது அவர் பிணையில் வெளிவர உள்ளார். இச்சம்பவம் அதோடு முடிந்துவிட்டது.
இதுபோன்றுதான் இலங்கையில் தொடர்ச்சியாக நடத்துகொண்டு வருகின்றது. இதனை அரசாங்கம் கேக்க போனால் எங்களுடைய விடயத்தில் தலையிட வேண்டாம் அதை நாங்கள் பாத்துகொள்கிறோம் என புத்தசீவிகள் கூறிகின்றனர். இதற்கு சில அரசியல்வாதிகளும் துணை போகின்றனர். இவ்வாறான ஒரு சூழல்தான் இலங்கையில் இருந்து வருகின்றது.