தைரியம் இருந்தால் வெளியே வாருங்கள்; சரத் வீரசேகரவிற்கு பகிரங்க சவால்!
தைரியம் இருந்தால் நாடாளுமன்றுக்கு வெளியேவந்து நீதிபதிக்கு எதிரான கருத்தை வெளியிட்டு காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவிற்கு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக தெரிவித்த கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்து சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சரத்வீரசேகர பேச்சுக்கு கண்டனம்
இதன்போது கருத்து தெரிவித்த போதே வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அன்ரன் புனிதநாயகம் சரத்வீரசேகரவுக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.
நீதி துறையில் அரசியல் தலையிடு இல்லாமல் நீதிபதிகளை சுதந்திரமாக செயற்படவிடுங்கள் என்ற பல்வேறு கோரிக்கைகளையும் சட்டத்தரணிகள் முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.