விரைவில் மாகாண சபைத் தேர்தல்
இந்தியாவின் அழுத்தம் காரணமாக முதலில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படலாம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார் என தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களுடன் மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று கலந்துரையாடலின்போதே பஸில் ராஜபக்ச இதனை கூறியதாக தெரியவருகின்றது.
உறுப்பினர்களுக்கு பஸில் ஆலோசனை
இந்தியாவின் அழுத்தத்தால் மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்த வாய்ப்புள்ளதால், அதனை எதிர்கொள்வதற்கு தயாராகுமாறு கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு பஸில் ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் 10 ஆம் திகதி இந்திய பிரதமரை சந்திக்கவுள்ளார் எனவும், இதன்போது மாகாணசபைத் தேர்தல் சம்பந்தமாக தீர்மானம் எடுக்கப்படலாம் எனவும் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.