காலிமுகத்திடலில் இருந்து வெளியேறாத சில போராட்டக்காரர்கள்! (Video)
காலிமுகத்திடலில் இருந்து போராட்டகாரகள் வெளியேறியதாக கூறப்பட்டபோதும் இன்னும் சில அங்கிருந்து வெளியேறாது உள்ளனர். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து அரசாங்கத்திற்கு எதிராக மக்களால் காலி முகத்திடலில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தொடர்ந்து வெடித்த மக்கள் போராட்டாத்தால் முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியதுடன் தனது பதவியையும் இராஜினாமா செய்திருந்தார்.
அதன்பின்னர் நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்ற நிலையில் காலி முகத்திடலில் இருந்த போராட்டகாரர்கள் படையினரால் அப்புறப்பட்டிருந்தனர்.
எனினும் அங்கு சிலர் வெளியேறாது இருந்த நிலையில் அவர்களும் நேற்றையதினம் வெளியேற வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், சிலர் இன்னும் அங்கேயே தங்யிருக்கின்றனர்.