எம்.பியின் வீட்டை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள்!
முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் (Ali Sabri Raheem) வீட்டின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்றிரவு (09-05-2022) இடம்பெற்றுள்ளது.
புத்தளம் வான் வீதியில் உள்ள குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் உத்தியோகபூர்வ வீட்டின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினரின் உத்தியோகபூர்வ இல்லம், அவரது அலுவலகம் என்பனவற்றின் மீது இனந்தெரியாத குழுக்களினால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான அலிசப்ரி ரஹீம், கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் முஸ்லிம் தேசிய கட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர், அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 20 ஆவது திருத்த சட்டத்திற்கு ஆதரவு வழங்கியது முதல் இன்றுவரை அரசு சார் உறுப்பினராக செயற்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டு, சேதப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.