கொழும்பில் பொலிசாருடன் கடும் வாக்குவாதம்; ஹிருணிக்கா கைது(Video)
ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணித் தலைவி ஹிருணிகா பிரேமச்சந்திர சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் கொழும்பில் வீதி நாடகத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கறுவாத்தோட்ட பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இன்று ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனை ஹிருணிக்கா பிறேமச்சந்திர உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் அணியின் மகளிர் அணியினர் முன்னெடுத்துள்ளனர்.
இதில் பெண்கள் செம்மஞ்சள் நிற உடை மற்றும் செம்மஞ்சள் நிற பட்டி தலையில் அணிந்து, செம்மஞ்சள் நிற கொடிகளை ஏந்திய வண்ணம் பலர் கொண்டுள்ளார்.
பொலிஸார் குவிப்பு
இதேவேளை அப்பகுதியில் பெருமளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேவேளை கொழும்பில் பொலிஸாரை போன்று உடையணிந்து வீதிநாடகம் மேற்கொண்ட இருவரை கறுவாத்தோட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஹிணிக்கா உள்ளிட்ட குறித்த பெண்கள் குழுவினர் அனைவரும் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தம்மையும் கைது செய்யுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.