நிதியமைச்சிற்கு முன்பாக போராட்டம்!(Video)
நிதி அமைச்சுக்கு அருகில் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வங்கி ஊழியர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் குழாமினர் தற்போது கொழும்பில் இரண்டு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழில் வல்லுநர்களின் சம்பளத்தில் மீதான புதிய வரிகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்தனர்.
தாமரை தடாகத்துக்கு அருகாமையில் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அத்துடன் நிதி அமைச்சுக்கு அருகில் இடம்பெற்ற போராட்டம் காரணமாக காலி முகத்திடலுக்கு செல்லும் வீதி லோட்டஸ் சுற்றுவட்டம் என்பவற்றின் ஊடான போக்குவரத்துளௌம் பாதிக்கட்டிருந்தது.
நாட்டில் இடம்பெற்ற மேலதிக செய்திகளின் தொகுப்பு காணொளியில்...