யாழ். சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம்
சட்டவிரோதமான முறையில் தனியார் காணியில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தையிட்டியில் இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் பொழுது சட்டவிரோத விகாரையை இடித்தழி, இராணுவமே வெளியேறு. நீதி வேண்டும் நீதி வேண்டும் ஆகிய கோஷங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டம் இடம்பெற்ற பகுதியில் போராட்டகாரர்களை அச்சுறுத்தும் முகமாக கனரக வாகனங்கள் மிக வேகமாக பயணித்ததாகவும் பொலிஸாரும் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாகவும் போராட்டகார்ர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் பொழுது காணிகளின் உரிமையாளர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், சட்டதரனிகளான காண்டீபன், சுகாஷ் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் உட்பட பல்வேறு கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.