அநுராதபுர மோதல் ; வாக்குமூலம் வழங்க மறுத்த கஸ்ஸப தேரர் தரப்பு
அநுராதபுரம் ருவன்வெலிசாயவுக்கு அருகில் தேரர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த ராஜாங்கனை சத்தாரதன தேரர் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதை பலாங்கொடை கஸ்ஸப தேரர் தரப்பிலுள்ள அனைவரும் மறுத்துள்ளதாக அநுராதபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ருவன்வெலிசாயவிற்கு அருகிலுள்ள இடத்திற்கு வந்த ராஜாங்கனை சத்தாரதன உட்பட சிவில் நபர்கள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகள் மற்றும் பொது மக்களுடன் மோதலை ஏற்படுத்தியதாகக் க எந்தவொரு சந்தேகநபரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

குறித்த குழுவினரை ஏன் கைது செய்யவில்லை என ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அநுராதபுர பிரதேச உயர்மட்டப் பொலிஸ் அதிகாரி ஒருவர், ராஜாங்கனை சத்தாரதன என்பவர் அல்லது அவருடன் வந்ததாகக் கூறப்படும் நபர்கள் குறித்து வாக்குமூலம் வழங்குவதை பலாங்கொடை கஸ்ஸப தேரர் தரப்பிலுள்ள அனைவரும் மறுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த மோதலின் போது தலையில் காயம் ஏற்பட்டு அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜாங்கனை சத்தாரதன என்பவர், தற்போது அநுராதபுரம் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.