சிறந்த வளர்சிதை மாற்றத்தை தூண்ட உதவும் புரோட்டீன்
தினசரி உணவில் புரோட்டீன் சேர்த்துக்கொள்வதால் வயிறு நிரம்பியது போன்ற உணர்வும், தசை ஆரோக்கியத்திற்கும், ரத்த அழுத்தத்தை சமன் செய்வதற்கும் உதவுகிறது.
அது மட்டுமள்ளாது புரோட்டீன் சத்து உடலுக்கு சிறந்த வளர்சிதை மாற்றத்தை தூண்ட செய்கிறது. வயதான பின்பு புரோட்டீனின் தேவை அதிகரிக்கிறது, அதனால் தினசரி உணவில் புரோட்டீன் சேர்த்துக்கொள்வது அவசியமானது.
புரத சத்துக்கள் உள்ள உணவுகள்
பால் சம்மந்தப்பட்ட உணவு வகைகளில் புரோட்டீன் சத்து அதிகமாக கிடைக்கிறது. அதேசமயம் பால் ஒவ்வாமை அல்லது லாக்டோஸ் ஒவ்வாமை போன்றவை இருக்கும்பட்சத்தில் பால் பொருட்களை தவிர்க்கலாம்.
இதுபோன்ற ஒவ்வாமைகள் இல்லாமல் இருக்கும்பட்சத்தில் 50 வயதிற்கு மேல் ஆகும்போது பால் பொருட்களை சாப்பிட்டு அதிகளவு புரோட்டீன் மற்றும் வைட்டமின்களை பெறலாம்.
பால், பாலாடைக்கட்டி மற்றும் தயிர் போன்றவை புரத சத்து தருவதோடு எலும்புகளுக்கும் வலுவை தருகிறது. குயினோவா என்கிற தானியத்தில் அதிகளவில் புரத சத்து நிரம்பியுள்ளது, இதில் உடலுக்கு அத்தியாவசியமான அமினோ அமிலங்களும் நிரம்பியுள்ளது.
மேலும் இதிலுள்ள நார்சத்து கொழுப்புகளை குறைக்க உதவுகிறது, அதனால் வயதானவர்கள் இதனை சாப்பிடலாம்.
மாட்டிறைச்சியில் இரும்புசத்து, வைட்டமின் பி-12, செலினியம் மற்றும் உயர்தர புரதம் போன்ற 10 அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
புரத சத்திற்கு நல்ல ஆதாரமாக முட்டை விளங்குகிறது, ஒரு முட்டையில் 6-7 கிராம் புரதம், இரும்புச் சத்து, வைட்டமின்கள் பி-12 மற்றும் டி மற்றும் கோலின் போன்ற சத்துக்கள் உள்ளன.
பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் 20 வகையான அமினோ அமிலங்கள் உள்ளன, இவற்றில் புரதம் மட்டுமின்றி அதிகளவு நார்ச்சத்தும் உள்ளது
மேலும் இது உடலில் தங்கியிருக்கும் நச்சுக்களை தேவையற்ற கழிவுகளையும் நீக்க உதவுகிறது.