இலங்கையில் மறைமுகமாக இயங்கி வந்த விபசார விடுதிகள்: ஐந்து பெண் சிக்கினர்!
இலங்கையில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த இரு விபசார விடுதிகளை பொலிஸார் சுற்றிவளைத்த நிலையில் 2 முகாமையாளர்கள் மற்றும் 5 பெண்களை கைது செய்துள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை கிரிபத்கொட பொலிஸாரால் கடந்த 17ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த சுற்றிவளைப்பு மஹர நீதவான் நீதிமன்றில் உத்தரவுக்கு அமைய பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கண்டி வீதியின் கலா சந்தியில் ஒரு மசாஜ் நிலையமும், மாகொல வீதி பகுதியில் ஒரு மசாஜ் நிலையம் இருந்த நிலையில் சோதனையிடப்பட்டுள்ளது.
கலா சந்தியில் உள்ள மசாஜ் நிலையத்தில் 3 பெண்களுடன் முகாமையாளர் ஒருவரும் மாகொல வீதி பகுதியில் உள்ள மசாஜ் நிலையத்தில் 2 பெண்களுடன் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை, களனி மற்றும் கடவத்தை பிரதேசங்களில் வசிக்கும் 22 வயதுக்கும் 48 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.
முகாமையாளர் ஒருவர் இரத்தினபுரி பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதான ஒருவர் என்பதுடன், மற்றைய முகாமையாளர் சியம்பலாண்டுவ பிரதேசத்தை சேர்ந்த 28 வயதானவர் ஆவார்.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மஹர நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை கிரிபத்கொட காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மஞ்சுள டி சில்வா, குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதி காவல் பரிசோதகர் மதுரங்க கமகே, பொ. ரத்நாயக்க (90071), நந்தசிறி (93652), தேவிடு (100478), ஹஸ்மின் (98467), மகளிர் போ கோ. அதிகாரிகள் செவ்வந்தி (10588) மற்றும் சஞ்சலா (12125) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழு மேற்கொண்டுள்ளது.