மிரள வைக்கும் அரசியல் கட்சிகளின் சொத்து விபரம்!
இந்தியாவில் அரசியல் கட்சிகளை சொத்துவிபரங்கள் வெளியாகியுள்ள நிலையில் மிரள வைக்கும் வகையில் அரசியல் கட்சிகளின் சுத்துக்கள் உள்ளன.
அதன்படி தேசிய கட்சிகளின் சொத்து கணக்கில் பா.ஜ.க. முதலிடத்தில் இருக்கிறது. தமிழகத்தின் திமுக, அதிமுகவும் தங்கள் சொத்து மதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளன. 2019-2020 நிதியாண்டில் தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தங்கள் சொத்து விவரங்களை சமர்ப்பித்துள்ளன. அவற்றை தொகுத்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு, அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் அரசியல் கட்சிகளின் சொத்துமதிப்பு வெளிவந்து மக்களை பெரும் அதிர்ச்சிக்கும் வியப்புக்கும் ஆளாக்கியுள்ளது. நிலையான சொத்துகள், கடன் மற்றும் முன்தொகை, வைப்புநிதி, மூலத்தில் வரி பிடித்தம், மூலதனம் மற்றும் இதர சொத்துகள் என 6 இனங்களின் கீழ் சொத்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, அந்த நிதியாண்டில், பா.ஜனதா தனக்கு ரூ.4 ஆயிரத்து 874 கோடி சொத்து இருப்பதாக கணக்கு சமர்ப்பித்துள்ளது. தேசிய கட்சிகளில் சொத்து கணக்கில் பா.ஜ.க.தான் முதலிடத்தில் இருக்கிறது.
1 பா.ஜ.க. - ரூ.4,874 கோடி சொத்துமதிப்பு
2 பகுஜன் சமாஜ் கட்சி- ரூ.698 கோடி சொத்துமதிப்பு
3 காங்கிரஸ் - ரூ.588 கோடி சொத்துமதிப்பு
4 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி - ரூ.569 கோடி சொத்துமதிப்பு
5 திரிணாமுல் காங்கிரஸ் - ரூ.247 கோடி சொத்துமதிப்பு
6 இந்திய கம்யூனிஸ்டு கட்சி - ரூ.29 கோடி சொத்துமதிப்பு
7 தேசியவாத காங்கிரஸ் - ரூ.8 கோடி சொத்துமதிப்பு, என ஆகிய கட்சிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
அதேசமயம் எல்லா கட்சிகளும் வைப்புநிதியில்தான் அதிக சொத்துகளை வைத்துள்ளன. பா.ஜ.க.தாவுக்கு வைப்புநிதியாக மட்டும் ரூ.3,253 கோடி உள்ளது. மாநில கட்சிகளில், சமாஜ்வாடி கட்சி ரூ.563 கோடியே 47 லட்சம் சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளது.
1 சமாஜ்வாடி கட்சி - ரூ.563 கோடியே 47 லட்சம் சொத்துமதிப்பு
2 தெலுங்கானா ராஷ்டிர சமிதி - ரூ.301 கோடியே 47 சொத்துமதிப்பு
3 அ.தி.மு.க. - ரூ.267 கோடியே 61 லட்சம் சொத்துமதிப்பு மாநில கட்சிகளும் வைப்புநிதியில்தான் அதிக சொத்துகளை வைத்துள்ளன.
மேலும் சமாஜ்வாடி கட்சி ரூ.434 கோடியே 21 லட்சமும், அ.தி.மு.க. ரூ.246 கோடியே 90 லட்சமும், தி.மு.க. ரூ.162 கோடியே 42 லட்சமும் வைப்புநிதியாக 2019-2020 நிதியாண்டில் வைத்திருந்ததாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.