நாட்டில் சினிமா துறைக்கு தொழில் அங்கீகாரம்
நாட்டில் சினிமா துறையை ஒரு தொழிலாக பதிவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த அறிவிப்பானது வாராந்த அமைச்சரவை கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பான் சினிமா துறைக்கான ஊக்கமாகவும் சர்வதேச அங்கீகாரம் பெறவும் உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பௌத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மற்றும் கைத்தொழில் அமைச்சரினால் கூட்டுப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
இலங்கைத் திரையுலகில் பல தனித்துவமான திரைப்படங்கள் உருவாகியுள்ள போதிலும், உலக சினிமாவின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களை இலங்கை வழங்கியுள்ளதாக அந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், உள்ளூர் சினிமா துறையை முக்கிய துறையாக அறிவிக்காததால், அதன் அளவும் வளர்ச்சியும் சிறிய உள்ளூர் சந்தையாக மட்டுமே இருந்தது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா பாதிப்பால், உள்ளூர் திரையுலகமும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.