கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளாதவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸையும் போட்டுக் கொள்ளாதவர்களை, பொது இடங்களில் பிரவேசிப்பதை தடை செய்வதற்கான, சட்ட ரீதியான அனுமதி கிடைத்துள்ளதாகவும், இந்தத் திட்டம், விரைவில் அமுல்படுத்தப்படும் எனவும், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில், உரையாற்றும் போதே இவ்வாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
கொரோனா தொற்றுக்கு எதிரான, கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸையும் போட்டுக் கொள்ளாதவர்களை, பொது இடங்களில் பிரவேசிப்பதை தடை செய்வதற்கான சட்ட ரீதியான அனுமதி கிடைத்துள்ளது. இதற்கு, சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.
இதனை அரசாங்கம் விரைவில் அமுல்படுத்தும். இதற்காக, கடந்த வாரம், சட்டமா அதிபரிடம், என்னால் அனுமதி கோரப்பட்டதுடன், அதற்கு, அவர் அனுமதி வழங்கியுள்ளார். அபிவிருத்தி அடைந்துள்ள நாடுகளில், இந்த நடைமுறை தற்போது உண்டு. இதற்கு எதிராக, சிலர் நீதிமன்றம் செல்லக்கூடும்.
இதேவேளை, அதனை நாம் எதிர்கொள்ள வேண்டும்.
பொது இடங்களுக்குள் நுழையும் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி அளித்துள்ளது என மேலும் தெரித்துள்ளார்.